விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்… கொண்டாடும் சினி பிரபலங்கள்!… கண்டித்த ராமதாஸ்!!..

0
874
sarkar first look

விஜய் நடிக்கவிருக்கும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இது விஜய்யின் 62-ஆவது படம் சர்கார்.

இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதை சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

இரண்டாவது போஸ்டர் :

ரீசன்டாக இரண்டாவது போஸ்டரும் ( 2nd look ) வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் பர்ஸ்ட் லுக் :

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சரியாக 6 மணிக்கு விஜய் 62 படத்தின் பெயர் “சர்க்கார்” என்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இந்த தகவலை சமூக வலைதளத்தில் வைரலாக்கும் வேலையில் தீவிரமாக இரங்கியுள்ளனர்.

விஜய் பிறந்த நாள் :

தளபதி விஜய்க்கு தமிழ் திரையுலகில் எந்த அளவுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளார்களோ, அந்த அளவுக்கு மலையாள திரையுலகிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

இந்த வருடம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், தனது பிறந்த நாளை விமர்சயாக கொண்டாட வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தாலும், ரசிகர்கள் தளபதியின் பிறந்த நாளை விமர்சயாகவும், விமர்சனங்களுடனும் கொண்டாடினர்.

சர்க்கார் :

இந்த நிலையில் சர்க்கார் பஸ்ட்லுக் வெளியானதும், அனைத்து ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்த்து விட்டனர். அதிலும் விஜய் மாஸாக உள்ளார்.

sarkar new record

விஜயின் ஆஸ்தான இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் “கத்தி”, “துப்பாக்கி”, தொடர்ந்து மூன்றாவது படம் இயக்கி வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

விவசாயிகள் :

இந்த படத்தில் விஜய் விவசாயிகளுக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், விவசாயிகள் சம்மந்தமான பல தலைப்புகள் வந்து ரசிகர்களை குழப்பி வந்த நிலையில் தற்போது படம் பெயர் சர்க்கார் என வெளியானதில் ரசிகர்களுக்கு தெளிவாக உள்ளது.

வரவேற்பு :

தற்போது வெளியாகி உள்ள சர்க்கார் படத்தின் தலைப்பை ரசிகர்கள் பல #Thalapathy62FL #vijay62 #sarkar #thalapathy62 #HBYvijay62 #சர்க்கார் எனும் ஹேஷ்டேக் செய்து சேர் செய்து வருகிறார்கள்.

இந்த படம் தீபாவளிக்கு வேளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்கார் ஃபஸ்ட் லுக் போஸ்டர் : கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில், அதற்கு பாமகவிடமிருந்து எதிர்ப்புக் குரல் வெளிவந்துள்ளது.
விஜயின் 62வது படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டு, அதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசிடம் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் வந்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற காட்சியை ஃபஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

Sarkar anbumani tweet
மேலும், நடிகர் விஜய் சிகரெட் இல்லாமலே மிகவும் ஸ்டைலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என்ற, அன்புமணி ராமதாசின் வேண்டுகோளை ஏற்று, இனி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நடிகர் விஜய் உறுதியளித்திருந்தார்.ஆனால் அந்த உறுதியை நடிகர் விஜய் மீறியுள்ள நிலையில், புகைப்பிடிப்பது போன்ற ஃபஸ்ட் லுக் போஸ்டருக்கு, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், கொண்டாட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் அஜித் குமாரின் அசல் பட போஸ்டருக்கும் அண்புமனி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அந்த படக்குழுவினர் அசல் படத்தின் பேனரை மாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here