படைக்கிறவன் மட்டுமில்ல, பயிரிடுறவனும் கடவுள் தான் – கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர்

0
756
kadaikutti singam

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்திக்கு ஜோடியாக வனமகன் சாயிஷா நடித்துள்ளார். அவருடன் பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு கைகோர்த்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

மேலும் சத்யராஜ், பானுபிரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயம், கிராமியம், கூட்டுக் குடும்பம் ஆகியவற்றை மையாமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.
டீசரின் தொடக்கத்தில் ‘படைக்கிறவன் மட்டுமில்ல, பயிரிடுறவனும் கடவுள் தான்’ என்று கார்த்தி கூறும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை, தென்காசி, காரைக்குடி பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. தமிழில் வெளியாகும் அதேவேலையில் இப்படம் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான தனது பாணியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதியுள்ளார்.

குடும்ப உறவுகளின் முக்கியத்தை கடைக்குட்டி சிங்கம் சொல்லும் – சூர்யா :

வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம் என்பதை இந்த படம் சொல்கிறது என்று ‘கடைக்குட்டி சிங்கம்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு. கார்த்தியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். தம்பி கார்த்தியின் வளர்ச்சியும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின.

வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது. இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.” இவ்வாறு சூர்யா பேசினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “விவசாயிகளை பெருமைப்படுத்தும் படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சிபடுத்தி உள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது” என்றார்.

kadaikutti-singam-music-launch

இந்த படத்தின் டீஸர் YouTube மற்றும் டிவிட்டரிலும் டிரென்டிங்கில் உள்ளது.

#Kadaikuttysingam #surya #karthi #suryakarthi #littleyounglion போன்ற ஷேஸ் டேக்குகளை பயன்படுத்தி இந்த படத்தை ரசிகர்கள் இணையத்தில் பிரபலம் செய்கின்றனர்.

மேலும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து ஆந்திராவில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here