Thursday, June 21, 2018
Home Blog

Avengers Infinity War – Review in Tamil

0
avengers infinity war review tamil

Avengers Infinity War:

Important Details about Avengers Infinity War:

 • டீசர்/டிரெயிலர் வெளியான தேதி: நவம்பர் 29,2017.
 • படம் வெளியான தேதி: ஏப்ரல் 23, 2018.
 • படத்தின் மொத்த செலவு: 2100 கோடி ருபாய்.
 • இதுவரை சம்பாதித்தது: 13,000 கோடி ருபாய்.

இந்த படத்திற்கு முன் பார்த்திருக்க வேண்டிய படங்கள்:

 1. Iron Man – 2008
 2. The Incredible Hulk – 2008
 3. Iron Man 2 – 2010
 4. Thor – 2011
 5. Captain America – The First Avenger – 2011
 6. The Avengers – 2012
 7. Iron Man 3 – 2013
 8. Thor: The Dark World – 2013
 9. Captain America: The Winter Soldier – 2014
 10. Guardians of the Galaxy – 2014
 11. Avengers: Age of Ultron – 2015
 12. Ant-Man -2015
 13. Captain America: Civil War – 2016
 14. Doctor Strange – 2016
 15. Guardians of the Galaxy Vol. 2 – 2017
 16. Spider-Man: Homecoming – 2017
 17. Thor: Ragnarok – 2017
 18. Black Panther – 2018

இந்த 18 படங்களையும் பார்த்தால் தான் உங்களுக்கு Avengers Infinity War படம் முழுமையாக புரியும்.

Infinity War – Review:

மார்வல் படங்கள் அனைத்தும் உலகத்தை காப்பது போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மார்வல் பாஷையில் உலகம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம்.

முதல் பாதி:

முதலில், நமது தோர் வில்லனாகிய தனோஸிடம் அடி வாங்குவார். எதற்கு என்று யாருக்கும் தெரியாது. பிறகு அவர் சொல்வார் எங்களிடம் ஹல்க் உள்ளார் என்று பெருமையாக பேச பேச நமது ஹல்க் உள்ளே வந்து தாணோசை வெளுக்க ஆரம்பித்துவிடுவார். 10 வினாடியில் நமது தானோஸ் கடுப்பாகி ஹல்கை திருப்பி அடித்து தும்சம் செய்து விடுவார். அவ்வளவு தாங்க ஹல்க் அதுகப்ரம் வரவே மாட்டார் படம் முழுவதும்.

நம்ம தனோஸ், 5 வைர கல்லை எடுத்து விட்டால் உலகில் மிக பெரிய பலசாலி ஆயிவிடலம் என்று ஆசையை சொல்லி விட்டு, 3 கற்களை தேட பூமிக்கு அவனுடைய அடியாட்களை அனுப்பி வைப்பான். அவர்கள் அனவைரும் ஒன்னும் செய்ய முடியாது இருப்பினும் நம்ம சூப்பர் ஹீரோ அனைவரையும் கதி கலங்க வைத்து விடுவார்கள். 

நகைச்சுவை பெரிதாக இருக்காது. இருந்தாலும் நம்ம Iron Man, Doctor Strange, Spider Man இவங்க கூட அப்போ அப்போ காமடிய இருக்கும்.

சூப்பர் ஹீரோ ஒருத்தர ஒருத்தர் புருஞ்சுகிட்டு ஒன்னா சண்ட போட்ரகுல்லையே வில்லனுக இவங்கள அடிச்சு நொறுக்கிர்ரானுங்க.

இரண்டாம் பாதி:

எப்படியோ தானோஸ் ஓட அடியாளுக எவனும் வைர கல் மீதி 3அ எடுத்து தர மாட்டானுக அதனால தானோசே நேர்ல வந்து எல்லார் கிட்டயும் வைரத்த புடுங்கிருவான்.

நம்மளும், கடைசி வரைக்கும் எவனாவது தானோஸ அடிச்சு கொள்ளுவானுகனு எதிர் பாப்போம் ஆனா கடைசி வரைக்கும் அது நடக்காது.

இதுக்கு எடைல கொஞ்ச பேர் செத்து போயிருவாங்க, கொஞ்ச பேர் காணாம போயிருவாங்க. கடைசில நம்ம சூப்பர் ஹீரோஸ் கொஞ்ச பேர் தான் உயிரோட இருப்பாங்க. 

இந்த படத்துல இறந்து போனவங்க:

 1. Loki
 2. Heimdall (Thor’s Best Friend)
 3. Gamora
 4. Vision

சிதைந்து போனவங்க:

 1. Black Panther
 2. Spider-Man
 3. Doctor Strange
 4. Winter Soldier
 5. Scarlet Witch
 6. The Guardians of the Galaxy

தானோஸ் கிட்ட தப்பிச்சவங்க:

 1. Captain America
 2. Iron Man
 3. Thor
 4. Black Widow
 5. Hulk
 6. War Machine
 7. Rocket and Nebula
 8. Okoye and M’Baku

ஆக மொத்தம், இந்த Infinity War கண்டிப்பா 2வது பார்ட் வரும்னு சொல்லாம சொல்லிட்டாங்க.

Tip: படம் முடியற வரைக்கும் கண்டிப்பா பாருங்க அப்போத அடுத்த பார்ட்ல என்ன நடக்கும்னு கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியும். 

Theater or Online? – கண்டிப்பா இந்த படத்த எல்லாம் ஒரு தடவயாவது தியேட்டர்ல தான் பாக்கணும்.

 

ஏர்டெல் மற்றும் ஹவாய் 5ஜி சோதனையில் இணைய வேகம் 3GBps வேகத்தை தாண்டியது

0

முதலில் 5G என்றால் என்ன?

5G என்பது 5ஆவது தலைமுறை ஆகும். 5ஆவது தலைமுறையின் இணையம், தற்பொழுது இறுதிகட்ட சோதனையில் உள்ளது. 2020ஆவது வருடம் நமக்கு 5G சேவை முழுமையாக கிடைக்கும் என எதிர்பாக்கலாம்.

ஏர்டெல் மற்றும் ஹவாய் 5G சோதனை:

ஏர்டெல் மற்றும் டெலிகாம் கியர் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் இணைந்து இந்தியாவின் முதல் 5G சோதனையை ஏர்டெல் நிறுவனத்தின் செயலகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இந்த சோதனை மூலம் 4Gஐ விட 100 மடங்கிற்கும் மேலான வேகத்தை மற்றும் தரத்தை நம்மால் பெற முடியும்.

5G Speed test airtel
Image Courtesy: indiatimes

இன்னும் சுலபமாக சொன்னால், 5G ஒரு முடிவில்லா தொழில்நுட்பம் மற்றும் ஆட்டத்தையே மாற்றியமைப்பவனாக அமையலாம். டெலிகாம் செயலாளர், அருணா சுந்தர்ராஜன் இந்த வருட ஜூன் மாத இறுதிக்குள் 5G சேவை திட்டத்தை இறுதிபடுத்த உள்ளார் என தகவல் அளித்துள்ளார்.

இந்த சோதனையின் போது 3GBps வேகத்திற்கும் மேலான வேகத்தை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையே 3.5 GHz மொபைல் நெட்வொர்க்கின் அதிவேக இணையம் ஆகும்.

10 காரணங்கள் ஏன் Google Adsense சிறந்தது என்பதற்கு.

0
10 reasons why google adsense

எதற்காக Google Adsense?

நாம் நமக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்தி இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க உதவுவதில் முதல் இடத்தில் உள்ளது Adsense. நாம் செய்யும் எந்த ஒரு அற்புதமான வேலைக்கும் சன்மானம் தேவை. அதை இந்த Google Adsense நமக்கு அதிகமான முறையில் வழங்குகிறது.

ஏன் Google Adsense?

எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் நாம் சொல்லலாம் Google Adsense மற்ற விளம்பர இடைத்தரகர்களை விட சிறந்தது என்று. ஏனெனில் நாம் ஏற்கனவே கூறியது போல Google நம்மை பற்றி நம்மை விட அதிகமாக தெரிந்து வைத்துள்ளது.

முதலில் Google Adsenseஐ தமிழில் எப்படி முறையாக உபயோகிப்பது என்று கற்று கொள்வோம்.

சரி, இப்பொழுது அப்படி என்ன அந்த 10 காரணங்கள் என்பதை பார்போம்.

1. Setup: மிகவும் எளிமையான முறை

adsense setup guide

நாம் வெற்றிகரமாக Adsense கணக்கை தொடங்கியவுடன், நமக்கு உள்ள ஒரே வேலை கூகுள் கொடுக்கும் விளம்பர அமைப்பை நமது இணையத்தளத்தில் சேர்ப்பது மட்டும் தான். இங்கே Google Adsense கணக்கை எப்படி துவங்குவது என்று தெளிவாக படிக்கலாம்.

2. Adsense உடன் சுலபமாக வேலை செய்யலாம்

மற்ற விளம்பர இடைத்தரகர்களை விட கூகுள் உடன் விளம்பரம் செய்வது மிகவும் எளிமையான முறை ஆகும். உங்களுக்கு எந்த விதமான Programmingம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அகவே இதை யார் வேண்டுமானாலும் சுலபமாக பயன்படுத்தலாம். Amazon போன்ற விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் மற்ற இடைத்தரகர்களை விட கூகுளையே அதிகமாக நம்புகிறார்கள்.

3. ஒரே கூகுள் கணக்கு அணைத்து இணையதளங்களிர்க்கும்

பல விளம்பர இடைத்தரகர்கள் ஒரு கணக்கிற்கு ஒரு இணையதளம் மட்டும் தான் சேர்க்க முடியும் என்றோ அல்லது சில இணையதளங்கள் மட்டும் தான் சேர்க்க முடியும் என்றோ வரையறை வைத்திருப்பார்கள். ஆனால் கூகுளில் ஒரே கணக்கை வைத்து நீங்கள் உங்கள் அணைத்து இணையதளங்களையும் சேர்த்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம்.

4. மிகவும் பிரபலமான நிறுவனங்களின் கூட்டு

நாம், நம் இணையத்தளத்தில் கூகுள் மூலம் செய்யும் விளம்பரம் அனைத்தும் மிக பிரபலமான நிறுவங்களின் விளம்பரமாகவே இருக்கும். அதனால் நம்முடைய வாசகர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்காது விளம்பரம் மூலம். மேலும் பிரபலமான நிறுவனகள் அதிகமான பணத்தை கூகுளிற்கு கொடுப்பதால் நமக்கும் கூடுதலான சம்பாத்தியம் இருக்கும்.

5. ஆட்சென்ஸ்ற்கான தனியான மன்றம் (Forum) உள்ளது

Adsense Forum மூலம் நம்மை போல நமக்கு முன்பே இந்த சேவையை உபயோகித்து வரும் அனைவரின் சந்தேகங்கள், பிரச்சனைகள் மற்றும் என்ன தவறாக உள்ளது என்பது பற்றி நாம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம் மேலும் நம்முடைய சந்தேகங்கள் அனைத்தையும் சுலபமாக தீர்த்து கொள்ளலாம்.

6. உழைப்பிற்கேற்ற சம்பளம்

Adsense மூலம் நாம் எவ்வளவு உழைக்கிறோமோ அதற்க்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். இது நமக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கம் ஆகும். 1000 பார்வைகளுக்கு நமக்கு எவ்வளவு பணம் வருகிறது என்பது மிகபெரிய காரணி ஆகும். அதில் Adsense நமக்கு மிகபெரிய திருப்தியை அளிக்கும்.

7. கண்ணை கவரும் விளம்பர வடிவம்

வேலைக்காரன் படத்தில் கூறியது போல கண்ணை கவரும் வடிவில் விளம்பரங்கள் வருவதால் நம் வாசகர்கள் அதை விரும்பி உள்ளே செல்வார்கள். அதன் மூலம் நமக்கு பணத்தை கூகுள் கொடுக்கும். விளம்பரங்கள் மிகவும் அழகாக கண்ணை கவரும் வடிவில் இல்லையெனில் அதை யாரும் விரும்பி கிளிக் செய்ய மாட்டார்கள்.

8. பண வழங்கீடு

மற்ற விளம்பர இடைத்தரகர்களை விட மிக எளிமையான வழியில் நமக்கு பணம் வந்து சேரும் வடிவில் கூகுள் ஆட்சென்ஸ் வடிவமைக்கபட்டுள்ளது. ஆனால் அணைத்து விளம்பர இடைத்தரகர்கள் போலவே கூகுள் ஆட்சென்ஸ்ம் ஒரு வரையறை 100 அமெரிக்கன் டாலர் என வைத்துள்ளது. எனினும் இது சரியான முறை தான் ஆகும்.

9. அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளம்பர இடைதரகர் நிறுவனம்

உலகில் உள்ள மிக பெரும்பான்மையான நிறுவனங்கள், மற்றும் bloggersஇடம் ஒரு நல்ல பெயரை வைத்திருக்கும் ஒரே நிறுவனம் கூகுள் ஆட்சென்ஸ். தரமான விளம்பரங்களை மட்டுமே நமக்கு கொடுத்து, நம்மிடத்திலும் நல்ல பெயரை பெற்றுள்ளது.

10. சுய விளம்பர வடிவம் (Automatic Ad Formats)

தற்போது 2018இல் கூகுள் ஆட்சென்ஸ் ஒரு மிக அபூர்வமான சிறப்பம்சத்தை அறிமுகபடுத்தி உள்ளது. இயந்திர கற்றல்(Machine Learning) மூலம் தானாகவே உபயோகிப்பாலரின் தேவைகேற்ப விளம்பரம் மற்றும் அவர்களின் விருபதிர்கேர்ப்ப விளம்பரங்களை காட்டுவதன் மூலம் நமக்கு அதிகமா கிளிக்ஸ் வர வாய்ப்புள்ளது.

தமிழ் டெக்கீஸ்ன் தனிப்பட்ட கருத்து:

கூகுள் ஆட்சென்ஸ் ஒரு கத்துக்குட்டிக்கு மிகவும் பயனுள்ள தொழிநுட்பம் ஆகும். இதன் மூலம் இணையதள வருமானம் நமக்கு போதுமான அளவு கிடைக்க வாய்ப்புள்ளது சரியான முறையில் உபயோகித்தால். இந்த பதிவை உங்கள் நண்பருடன் பகிர்ந்தால் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த பரிசு.

இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் சந்தேகத்தை கீழே கமண்ட் செய்யவும். முடிந்தவரை உடனடியாக பதிலளிக்கிறோம்.

Google AdSenseஐ தமிழில் எப்படி முறையாக உபயோகிப்பது?

0
Google Adsense Tamil

Google Adsense Tamil

Adsense ஒரு கண்ணோட்டம்:

Google Adsense Tamil மூலம் Adsense ஐ பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.

“Adsense என்பது Blogger / Web developer / YouTuber ஆகிய நம் மூலம் மக்களுக்கு விளம்பரத்தை எடுத்து செல்ல பயன்படுத்தபடும் ஒரு தொழில்நுட்பம்.”

இந்த Google Adsense தமிழ் பயிற்சியின் மூலம் நீங்கள் அ முதல் ஃ வரை தெளிவாக இணையதளத்தில் எப்படி சரியான வழியில் பணம் சம்பாதிப்பது என்று கற்றுக்கொள்ளலாம்.

இணையதளத்தில் பணம் சம்பாதிக்க 1000 வழிகள் இருப்பினும் Google Adsense ஒரு மிக சிறந்த பயிற்சி மற்றும் கத்துக்குட்டிகளுக்கு எளிமையான முறையாகும். ஏனெனில் (நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் பயனர் என்றால்) உங்களை பற்றி உங்களை விட Google அதிகமாக தெரிந்து வைத்துள்ளது.

முதலில் Google Adsense பற்றிய சிறிய தொகுப்பு

வெற்றிகரமான 1$ சம்பாத்தியத்திற்கு பிறகு

 • எப்படி $1 சம்பாதித்தோம் என்கிற ஆராய்ச்சி.
 • CTR, CPC, Impression, RPM என்றால் என்ன?
 • விளம்பரம் செய்ய சரியான உங்கள் இணையத்தளத்தில் சரியான இடம்.
 • Adsense for Search என்றால் என்ன? எப்படி செயல்படுத்துவது?
 • CPCஐ எப்படி அதிகபடுத்துவது?
 • தினசரி உழைப்பு மற்றும் தற்போதிய செய்திகளின் அப்டேட்ஸ் = வெற்றி.

முதல் 100$ சம்பாதனை மற்றும் வங்கி கணக்கு

 • குறைந்தபட்ச பண பரிவர்த்தனை = 100$.
 • Google Adsense இந்தியா பற்றிய மேற்பார்வை.
 • முதல் 100$ சம்பாத்தியத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?

மேலும் பல முக்கியமான தகவல்கள்

 • எந்த விதமான Blog / Websitesஐ தேர்வு செய்வது?
 • அதிகபட்சமாக எவ்வளவு சம்பாதிக்கலாம் Google மூலம்?
 • உங்கள் கணக்கு ரத்து(Disabled/Disapproved) செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
 • எவ்வளவு பயனாளிகள் தேவை கண்ணியமான சம்பாத்தியத்திற்கு?

முடிவுரை:

இந்த அணைத்து பயிற்சிகளையும் முறையாக கற்றுக்கொண்டால் நீங்கள் வெகு விரைவில் சுலபமாக Adsense மூலம் பணம் சம்பாதிக்க தொடங்கி விடலாம், மற்றும் என்ன சந்தேகம் இருந்தாலும் கண்டிப்பாக கீழே Comment செய்யவும். நாங்கள் விரைவாக பதிலளிக்கிறோம்.

இந்த பதிவில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் சங்கடமின்றி கூறுங்கள். நாங்கள் அதை சரி செய்கிறோம்.

How to signup for Google Adsense?

0
adsense tamil

About Google Adsense:

Google Adsense என்பது உங்கள் மூலமாக மக்களுக்கு Googleன் விளம்பரங்களை எளிதாக எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ஒரு அதிநவீனமான தொழில்நுட்பம்.

How Google Adsense Works?

Googleன் பெரும்பான்மையான வருமானம் Google Adsense மற்றும் Google Adwords மூலம் மட்டும் தான். Adwords ல் Amazon, Facebook போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் விளம்பரம் செய்வார்கள். அதை Google அதனுடைய மிகபெரிய Search Engineல் யாரேனும் ஏதாவது தேடினால் அந்த தேடலுக்கு சம்பந்தமுடைய விளம்பரங்களை காண்பிக்கும். இதன் மூலம் மக்களாகிய நாம் அதனுள் செல்வோம் அப்பொழுது Amzon, Facebook ஆகியன Googleற்க்கு பேசிய தொகையை வழங்குவர்.

Adsenseல் நாம் கணக்கை உருவாக்கிய மறு நிமிடம் நமது இணையதளங்களுக்கு Adsense விளம்பரம் செய்ய தயாராகிவிடும். நமக்கு ஒரே வேலை அந்த Adsenseன் codeஐ நமது இணையத்தளத்தில் தேவையான இடத்தில வைப்பது தான். அதற்க்கு பிறகு நமது இணையத்தளத்தில் விளம்பரம் வர தொடங்கி விடும். உதாரனமாக Amazon, Googleற்க்கு ஒரு விளம்பரத்திற்கு 100 ரூபாய் கொடுத்தால் அதில்  நமக்கு 68% (68 ரூபாய்)Googleற்க்கு 32%(32 ரூபாய்).

What are the Prerequisites?

Adsenseல் கணக்கு உருவாக்க உங்களுக்கு முக்கியமாக Gmail Account தேவை. நீங்கள் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

 1. உங்களுக்கான சொந்த இணையதளம்/Blog (Ex: https://tamiltechies.in).
 2. Blogger Account.
 3. Youtube Account.

How to Sign up with Your Website?

 1. முதலில் இங்கே செல்லுங்கள். Adsense Signup Page.
 2. உங்கள் இணையதளமுகவரியை உள்ளிடவும்.
 3. நம் நாடான இந்தியாவை தேர்ந்தெடுங்கள்.
 4. Create Accountஐ அழுத்தவும்.
 5. உங்கள் உடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
 6. தொலைபேசி என்னை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
 7. அவ்வளவு தாங்க.

How to Signup with Blogger?

Blogger மூலம் உங்கள் சொந்த செலவு எதுவுமின்றி உங்கள் Blogஐ நீங்கள் வடிவமைக்கலாம்.

 1. உங்களிடம் Blogger Account இல்லையென்றால் அங்கே கூட்டி செல்லும். நீங்கள் புதிய Blogger Accountஐ உருவாக்க வேண்டும்.
 2. உங்கள் Blog 6 மாதத்திற்கு மேல் முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும் Google Adsenseல் இணைக்க.
 3. புதிய Blogger Account என்றால் நீங்கள் 6 மாதம் உழைக்க வேண்டும்.
 4. உங்கள் Blogger தேவையான பார்வைகளை பெற்றுரிந்தால் Adsense உடன் இணைக்கலாம்.

How to Signup with Youtube!

Youtube அதிவேகமாக முன்னேறி வருவதால் Feb 2018 உடன் 1000 Subscriersக்கு குறைவாக உள்ள Channelsஐ Youtube நிராகரித்து வருகிறது.

Youtube உடன் Google Adsenseஐ இணைக்க தேவையானவை இதோ

 1. 1000 Subscribers Minimum
 2. 4,000 watch hours past 12 months

மேற்கூறியவை இருந்தால் எப்படி Adsense உடன் கணக்கை சேர்ப்பது?

 • Login Youtube using Gmail.
 • Settings -> Additional Features.
 • Enable monetization.
 • Accept all T&C.
 • Sign Up for Adsense.
 • உங்கள் தனிப்பட்ட விவரம் மற்றும் கணக்குவழக்கு விவரங்களை கேட்கும்.
 • இவை அனைத்தும் முடிந்த உடன் உங்கள் முதல் வீடியோ 10,000 பார்வைகளை தொடும் வரை உங்கள் கணக்கு நிலுவையில் இருக்கும்.
 • 10,000 பார்வைகளை தொட்டு விட்டால் உங்கள் கணக்கிற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
 • இறுப்பினும், Youtube நிறைய தடைகள் வைத்துள்ளது அதை நாம் நிராகரித்தால் நம் கணக்கு ஒட்டு மொத்தமாக நிறுத்த வாய்ப்பு உள்ளது.

How to signup adsense without Website?

இணையதளம் இல்லாமல் நீங்கள் Youtube, Blogger மூலம் Adsense கணக்கை தொடங்கலாம். அதை தவிர வேறு வழி இல்லை.

Conclusion:

இறுதியாக கணக்கை தொடங்கியவுடன் நீங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டும் இல்லையெனில் கணக்கை உருவாக்கியும் ஒரு பயனும் இல்லை.

Adsense உடன் கணக்கு உருவாக்குவது பற்றி எதாவது சந்தேகம் இருந்தால் உங்களுக்காக Comment பெட்டி காத்துகொண்டு இருக்கிறது.

We're on Social

499FansLike
25FollowersFollow
490FollowersFollow
37FollowersFollow
150SubscribersSubscribe